2020-21ஆம் ஆண்டு முதல் 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக கடந்த

இதற்கிடையில் 5,8ஆம் வகுப்பு மாணவர்கள் 60 மதிப்பெண்களுக்கு எழுத்து தேர்வு எழுத வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை ரத்து செய்வதாக தமிழக அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், 2020-21ஆம் ஆண்டு முதல் 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி பள்ளிக்கல்வித் துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது.