மழைக்காலத்துல மட்டுமே கிடைக்கும் அந்த அனுபவங்களுக்கு இங்கெல்லாம் போங்க

மழை அடிச்சு துவைச்சிட்டு இருக்கு. இந்த நேரத்துல எங்க சுற்றுலா போகுறது. என்ன விளையாடுறயானு கேக்காதீங்க.


உண்மையிலேயே உங்களுக்குதான் விசயம் தெரியல. மழைக் காலத்துல பைக் இல்லனா கார்ல டிரைவ் இன் போகுறதுதான் இந்த இடங்கள்ல அல்டிமேட் டூர்.


அதுலயும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள இடங்கள்லாம் சும்மா தெறிக்கும். இளஞ் சிங்கங்கள் பைக்க முறுக்கிட்டு லாவகமாக அழகான சாலைகள்ல, மனம் குளிர ஒரு பயணம் போவாங்க பாருங்க.. அத வார்த்தையால சொல்ல முடியாது. நீங்க அனுபவிச்சி பாத்தாதான் தெரியும். வாருங்கள் இந்த இடங்களுக்கு ஒரு பயணம் போகலாம்.


மழைக் காலம் வந்தால் போதும், இளைஞர்கள் குற்றாலத்துக்கு படையெடுக்கத் தொடங்கிவிடுவார்கள். மழையும், குளிரும் இருந்தாலும் அந்த கால சூழலிலும் பைக்கில் சல்லென்று பறப்பது இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும். வெப்பநிலை 25க்கும் குறைவாக மாற, காலச் சூழலுக்கு ஏற்ப காற்றும் தென்றலாக வீச, கடல் மட்டத்திலிருந்து 160 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பகுதியில் சாலைப் பயணம் செல்வது நிச்சயம் அலாதியாகத்தானே இருக்கும். சந்தேகமா.. டிரை பண்ணி பாருங்களேன்.