மதுரையிலிருந்து 161 கிமீ தொலைவில் கிழக்கு திசையில் அமைந்துள்ளது இந்த ராமேஸ்வரம் எனும் அழகிய தீவு நகரம். இங்கு செல்லவேண்டும் என்றால் நாம் பாம்பன் பாலத்தில் பயணிக்கவேண்டும்.
பாம்பன் பாலம் மண்டபம் பகுதியையும், அந்த பக்கம் உள்ள ராமேஸ்வரம் பகுதியையும் இணைக்கிறது. ராமேஸ்வரத்துக்கு முன்பாக அமைந்திருக்கும் பாம்பன் எனும் பகுதியின் பெயராலேயே அழைக்கப்படுகிறது.
அருகில் காண வேண்டிய மற்ற இடங்கள்
தனுஷ்கோடி தீவு
தனுஷ்கோடி ஆலயம்
அக்னி தீர்த்தம்
அன்னை இந்திரா காந்தி சாலை பாலம்
ஐந்து தலை அனுமன் கோவில்
கந்தமதன பர்வதம்
அரியமான் கடற்கரை
ராமேஸ்வரம்
ராமாயணத்தில் இந்த இடத்தைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ராமர் ஈஸ்வரனுக்கு இந்த பகுதியில் ஒரு கோவில் கட்டியுள்ளதாக நம்பப்படுகிறது. அதுவே இந்த ஊரின் பெயருக்கு காரணமாக அமைந்துள்ளதாக அறியப்படுகிறது.
பொதுவாக தமிழகத்துக்கு சுற்றுலா வருபவர்கள் கண்டிப்பாக செல்லவேண்டிய இடமாக கருதுவது இந்த ராமேஸ்வரம் தீவு ஆகும். முதலில் மதுரை அடுத்து ராமேஸ்வரம் அதன் பின்பு கன்னியாகுமரி என சுற்றுலாவுக்கு வருபவர்கள் தங்கள் திட்டத்தை தொடங்குகிறார்கள். ராமேஸ்வரத்தில் சுற்றிப் பார்க்க பல ஆன்மீகத் தலங்கள் இருக்கின்றன. வாருங்கள் நாமும் ஒரு சுற்றுலா சென்று வருவோம்.